பரமத்தி வேலூர் அருகே பெண் விரிவுரையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை!

 
suicide

பரமத்திவேலூர் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் பெண் விரிவுரையாளர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலம் பகுதியை  சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கரூர் புகளுர் காகித ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தேவிபிரியா(32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தேவிபிரியா, தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக தேவிபிரியா சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வேதனை அடைந்த தேவிபிரியா வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

paramathi vellore

இந்த நிலையில், நேற்றுகாலை அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தேவிபிரியா சடலமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், தேவிபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தேவி பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் அவர் இறந்ததால் இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.