திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் பெண் ஐ.டி. ஊழியர் பலி!

 
trichy

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்தவர் குமாரமங்கலம். இவரது மகள் காயத்ரி (25). பொறியியல் பட்டதாரியான இவர், நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை காயத்ரி பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியே மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் ஐ.டி. கம்பெனி பேருந்து சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம், காயத்ரி வாகனத்தின் மீது மோதியுள்ளது.

trichy gh

இதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காயத்ரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஐடி நிறுவன பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக காயத்ரியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் நவல்பட்டு போலீசார், காயத்ரியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.