பட்டுக்கோட்டை அருகே வயலில் சடலமாக கிடந்த விவசாயி - போலீசார் விசாரணை!

 
dead

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனது விவசாய நிலத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, அவரது விவசாய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் செல்லக்கண்ணு காதில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

pattukottai

இதனிடையே, செல்லகண்ணுவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லக்கண்ணு உடல்நல குறைவால் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.