தாராபுரம் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதல்... 4 பேர் பலி, இருவர் படுகாயம்!

 
accident

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். தாராபுரம் அடுத்த கொடுவாய் காக்கா பள்ளம் பகுதியில் சென்றபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஒடியுள்ளது. அப்போது சாலை தடுப்பை தாண்டி எதிரே திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தின்   மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த வீரகுமார், முருகேசன், வெற்றிசெல்வம் மற்றும் சுஜித் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

dead

மேலும், காரில் இருந்த மகேஷ், கிஷோர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இந்த பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊதியூர் போலீசார், பலியான 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.