ஓசூர் அருகே மேம்பாலத்தில் திடீரென தீ பற்றி எரிந்த கார்!

 
car fire car fire

ஓசூர் அருகே அத்திப்பள்ளி மேம்பாலத்தில் சென்ற காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்று பெங்களுருவில் இருந்து ஒசூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, கீழே இறங்கினார். சிறிது நேரத்திற்குள் என்ஜின் பகுதியில் தீப்பாற்றி மளமளவென கார் முழுவதும் தீ பரவியது. இதனால் சாலையில் கார் பற்றி எரிந்தது.

car fire

இது குறித்து கார் ஓட்டுநர் அளிதத தகவலின் பேரில் அத்திப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ஒசூர் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.