குளிர்பானம் என நினைத்து விஷத்தை குடித்த சிறுவன் பலி... திருப்பூர் அருகே சோகம்!

 
dead body

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே  குளிர்பானம் என நினைத்து பூச்சி மருந்தை குடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள கருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் - ஜமுனா தம்பதி. இவர்களது 11 வயது மகன் சஞ்சய். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சஞ்சய், தனது வீட்டின் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த பூச்சி மருந்தை குளிர்பானம் என கருதி, அவர் குடித்துள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, அந்த பாட்டிலை காண்பித்து தான் குடித்ததாக தெரிவித்துள்ளார்.

tirupur Gh

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பபம் குறித்து சிறுவனின் தந்தை கன்னியப்பன் சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிர்பானம் என நினைத்து விஷத்தை குடித்த பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.