மது அருந்துவதை கண்டித்த அத்தையை அடித்துக்கொன்ற சிறுவன்... தேனி அருகே பயங்கரம்!

 
murder

தேனி மாவட்டம் தேவாரம் அருகே மதுஅருந்துவதை கண்டித்த அத்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவனை போலீசார் கைது செ 

தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் அழகம்மாள் (65). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கணேசன். இவருக்கு மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் என இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணேசன் இறந்துவிட்டார். மேலும், அவரது மனைவி கேரளாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனால் அவர்களது 2 மகன்களையும், அத்தையான அழகம்மாள் வளர்த்து வந்துள்ளார்.  2 பேரும் அத்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர்.

dead

இந்த நிலையில், 17 வயது சிறுவன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அழகம்மாள், சிறுவனை கண்டித்துள்ளார். இதனிடையே மது அருந்துவது குறித்து தனது அண்ணன் மணிகண்டன், அத்தையிடம் கூறியதாக கருதிய சிறுவன், அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அழகம்மாள் அவர்களை சமாதானம் செய்து மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில், நேற்றிரவு அழகம்மாள் வீட்டில் துங்கிக்கொண்டிருந்தபோது, சிறுவன் உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த அழகம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தேவாரம் போலீசார், அழகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.