விழுப்புரத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி... பேருந்தை கற்கள் வீசி தாக்கிய உறவினர்கள்!

 
vilupuram

விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அனிஷ். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று அனிஷ், தனது நண்பர்களுடன் வாணியம்பாளைத்தில் இருந்து விழுப்புரத்துக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றபோது உடன் வந்த சிறுவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். இதனால் அனிஷும் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளர். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அனிஷ் மீது பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dead

தகவலின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.