கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொன்று வங்கி ஊழியர் தற்கொலை... திருச்சி அருகே பயங்கரம்!

 
murder

திருச்சி அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொன்ற வங்கி ஊழியர், பின்னர் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (31). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், புவனேஸ்வரிக்கு, அதே பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் வினோத்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

trichy gh

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக புவனேஸ்வரிக்கும், வினோத்குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை புவனேஸ்வரியின் வீட்டிற்கு வினோத்குமார் சென்றபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிய வினோத்குமார், தற்கொலை செய்வதற்காக பழைய மஞ்சள் திடல் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார்.
 

அப்போது, அந்த வழியாக சென்ற ரயில் ஏறியதில், வினோத்குமார் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பொன்மலை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.