ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி!

 
drowned

சேலம் மாவட்டம் ஆத்தூர்  அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கீரிப்பட்டி பேரூராட்சி கீழ்கொம்பை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 4 வயதில் சீனிவாசன் என்ற மகன் உள்ளார். நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவரது தோட்டத்தில் பயிரியிடப்பட்டிருந்த மக்காச்சோளம் அறுவடை பணி நடைபெற்றது. இதில் தியாகராஜன், சித்ரா தம்பதியினர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிறுவன் சீனிவாசன் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தான்.

Attur gh

அப்போது, எதிர்பாராத விதமாக தோட்டத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் சிறுவன் அலறி துடிக்கவே சத்தம் கேட்டு தியாகராஜன் மற்றும் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்துள்ளனர். அப்போது, சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி தேடலுக்கு பின் சிறுவன் சிறுவன் சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மல்லியகரை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.