நத்தத்தில் லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவர் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் 3ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவில் வசித்து வருபவர் பொன்னழகப்பன். இவரது 7 வயது மகன் குருபா. இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், இன்று காலை சிறுவன் குருபா மளிகை கடைக்கு செல்வதற்காக கொட்டாம்பட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக திண்டுக்கல் நோக்கி சென்ற டிப்பர் லாரி சிறுவன் குருபா மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார், குருபாவின் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

dead body

இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரியும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குருபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டை கைவிட்டு கலைந்து சென்றனர். லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.