குமரி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
suicide

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது 16 வயது மகள் ஷோபா. இவர் பூதப்பாண்டி அடுத்த துவரங்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி கமலியின் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று கமலி தனது உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றிருந்தார். இதனால் வீட்டில் ஷோபா மற்றும் தனியாக இருந்துள்ளார். அப்போது, திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் கமலி வீட்டிற்கு வந்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளார். அப்போது, சிறுமி ஷோபா தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

kumari

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.