மாரண்டஹள்ளி அருகே நெல் வயலில் பதுங்கியிருந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது!

 
python

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே நெல் வயலில் பதுங்கியிருந்த 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து மொரப்பூர் காப்பு காட்டில் விடுவித்தனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள மேல்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜா(55). இவருக்கு சொந்தமான நெல் வயலில் நேற்று நெல் அறுவடைப்பணி நடைபெற்றது. இதற்காக கூலி ஆட்கள் நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வயலுக்குள் இருந்து விநோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அருகில் சென்று பார்த்தபோது ரட்சத மலைப்பாம்பு ஒன்று வயலில் படுத்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கூலி தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

python

தொடர்ந்து, இதுகுறித்து விவசாயி ராஜா, பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நெல் வயலுக்குள் பதுங்கி இருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, பொதுமக்கள் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து, அந்த மலைப்பாம்பை சாக்கு பையில் அடைத்த வனச்சரகர் மற்றும் வனக்காவலர்கள், பின்னர் அதனை மொரப்பூர் காப்பு காட்டிற்கு கொண்டுசென்று பத்திரமாக விடுவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.