ஆம்பூரில் 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

 
suicide

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அழகாபுரி குண்டாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரவநாதன். லாரி ஓட்டுநர். இவரது மகள் கயல்விழி(14). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு இயத நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறையில் வீட்டிற்கு வந்த கயல்விழிக்கு மீண்டும் இதய நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

ambur

இந்த நிலையில், நேற்று கயல்விழியின் தாய் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் கயல்விழி தனியாக இருந்துள்ளார். அப்போது, அவருக்கு இதய நோய் காரணமாக வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவர் வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலிசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.