மேட்டுப்பாளையத்தில் காரில் கடத்திய 96 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 
gutka

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காரில் குட்கா கடத்திய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 96 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,  மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற ஆம்னி காரில் போலீசார் சோதனையிட்டனர்.

gutka

அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் ஏராளமான குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, 96 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தியது தொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது (38) என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.