ஊத்தங்கரை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; இளைஞர் போக்சோவில் கைது!

 
rape

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கேத்துநாயக்கன்பட்டி பொம்மதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 7 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி, தனது பாட்டி உண்ணாமலை வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவராமன்(35) என்பர் வீட்டில் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

arrest

பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குறித்து சிறுமியின் பெற்றோர், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிவராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.