தென்காசி மாவட்டத்தில் திருட்டுபோன ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்பு!

 
cellphon theft

தென்காசி மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்துபோன ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசார், அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்

தென்காசி மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் அளித்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில், கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்காண்டனர். போலீசாரின் துரித நடவடிக்கையால், மாவட்டம் முழுவதும் திருட்டுபோன மற்றும் தவறவிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது.

cellphone

மீட்கப்பட்ட செல்போன்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி. கிருஷ்ணராஜ் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும், அவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.