கடமலைக்குண்டு அருகே சரக்கு வேனில் கடத்திய 60 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

 
cannabis

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்புரம் பகுதியில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கண்டமனூரில் இருந்து கடமலைக்குண்டு நோக்கி சென்ற சரக்கு வேனை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேனில் மீன் கூடைகளுக்கு இடையே கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

arrest

இதனை அடுத்து, சுமார் 60 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் ஓட்டுநர் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா(32), சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை(35) ஆகியோரை போலீசார் கைது, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.