கடலூர் அருகே 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

 
pocso

கடலூர் அருகே 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேதியூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அசோக்குமார். இவர் அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை  அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த, மாணவியின் பெற்றோர் ஆசிரியர் அசோக்குமார் மீது சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

arrest 

புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மனைவியுடன் தலைமறைவான ஆசிரியர் அசோக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பூந்தோட்டம் கிராமத்தில் ஆசிரியர் அசோக்குமாரை பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து, ஆசிரியர் அசோக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.