கோவையில் 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி!

 
cbe

கோவையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை ஒட்டி 5 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவிகள் திருக்குறள் திரள் வாசிப்பில் ஈடுபட்டனர்.  

கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் சார்பில் 6-வது புத்தக கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  கண்காட்சியின் 7ஆம் நாளான நேற்று 5 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற திருக்குறள் ஒப்புவிக்கும், திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  கோவை நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 5 ஆயிரம் பேர் கொடிசியா டி ஹாலில், திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 10 அதிகாரங்களில் இருந்தும் 20 குறள்களை அனைத்து மாணவ, மாணவிகளும் திரளாக வாசித்தனர். திருக்குறள்களுக்கான விளக்கத்தினை ஆசிரியர்கள் வழங்கினர்.

cbe

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழ் அறிஞர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ராஜாராம் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதனிடையே நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவிவகளுக்கும் இலவசமாக திருக்குறள் புத்தம் வழங்கப்பட்ட நிலையில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வள்ளுவரின் உருவம் காவி நிறத்தில் இருந்ததால் சர்ச்சை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.