2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வளர்ப்பு தந்தைக்கு 46 ஆண்டுகள் சிறை... ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

 
judgement

ஈரோட்டில் 2 சிறுமிகளை சூடுவைத்து சித்ரவதை செய்ததுடன், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வளர்ப்பு தந்தைக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 8 மற்றும் 6 வயது சிறுமிகள் இருவரும், தனது தாயாரின் 2-வது கணவர் கணேசன் என்பவருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், தந்தை முறையிலான கணேசன், சிறுமிகள் இருவரையும் சூடுவைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமிகளின் பாட்டி அளித்த புகாரின் அடிபபடையில் கணேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

arrest

வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கணேசனுக்கு ஒரு போக்ஸோ வழக்கு மற்றும் சித்திரவதை வழக்கு என 2 வழக்குகளில் தலா 23  ஆண்டுகள் வீதம் மொத்தம் 46  ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.