தஞ்சை நகர் பகுதியில் திருட்டுபோன 45 செல்போன்கள் மீட்பு!

 
tanjore

தஞ்சை மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் காணாமல்போன ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். 

tanjore

தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு மற்றும் செல்போன் தவறவிட்டது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், மாவட்ட எஸ்பி ரவளிபிரியா உத்தரவின் பேரில் தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தலைமையிலான போலீசார், திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

tanjore

அதில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 45 செல்போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டவுன் டிஎஸ்பி ராஜா, செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சந்திரா, எஸ்எஸ்ஐ-க்கள் குருசாமி, பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.