திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட 4 பேர் கைது... 34 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
dgl

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட பேரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக, தென்மண்டல ஐ.ஜி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்படை போலீசார் செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 

arrest

தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த வைரவன் (22), சுந்தரபாண்டி (35), நவீனா (22) மற்றும் மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (20) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 34 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பிடிபட்ட நபர்களையும், கஞ்சாவையும் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.