கஞ்சா போதையில் தகராறு செய்த மகன் கழுத்தை நெரித்துக்கொலை... தாய் உள்ளிட்ட 4 பேர் கைது!

 
dead

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா போதையில் தகராறு செய்த மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் புதிய பஸ் நிலையம் கீழ்புறம் காமயகவுண்டன்பட்டி சாலை பிரிவை சேர்ந்தவர் கனகமணி (62). இவரது மகன் வேல்முருகன்(36). கூலி தொழிலாளியான இருவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த ரோஜா உடன் திருமணம் நடைபெற்றது. வேல்முருகனுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது.  இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

cumbum

இதனால் வேல்முருகன் தனது தாயாருடன் தனியே வசித்து வந்துள்ளார். மேலும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த வேல்முருகன் தாயாருடன் தகறாறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மறுநாள் காலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனிடையே, வேல்முருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உத்தமபுரம் கிராம நிர்வாக அலுவலர், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்முருகனின் தாய் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா போதையில் நாள்தோறும் வேல்முருகன் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தாயார் கனகவள்ளி, அவரது சகோதரர்கள் கண்ணன் (57), குமார்(45) மற்றும் உறவினர் கருப்பையா (45) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த வேல்முருகனின் மூச்சை பிடித்து கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வேல்முருகனின் தாய் கனகமணி உள்ளிட்ட  4 பேரையும் போலீசார்  கைது செய்தனர்.