குமரி அருகே வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய 4 பேர் கைது!

 
ngl

குமரி மாவட்டம்  பூதப்பாண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய 4 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 3 உடும்புகள் மற்றும் வேட்டை நாய்களை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலை காப்புக்காடு பகுதியில் சிலர் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடுவதாக, மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் தலைமையில் வனத்துறையினர் தெற்கு மலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர் வேட்டை நாய் உதவியுடன் உடும்புகளை வேட்டையாடியது தெரிய வந்தது. 

arrest

இதனை அடுத்து, உடும்பு வேட்டையாடிய ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த சாத்யகி மிராஸ்(23), நவீன் ராஜ் (25), அபிமன்யு  (24) மற்றும் ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த பாக்கிய ஜெகேஸ் (29) ஆகிய 4 பேரைபிடித்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து வேட்டையாடி  4 உடும்புகளையும், வேட்டைக்கு பயன்படுத்திய 2 வேட்டை நாய்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த வனத்துறையினர், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.