ஈரோட்டில் பணம்வைத்து சூதாடிய 4 பேர் கைது - ரூ.30 ஆயிரம் பறிமுதல்!

 
arrest

ஈரோட்டில் சட்டவிரோதமாக வீட்டில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து  ரூ.30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் போலீசார் கஞ்சா, குட்கா பொருட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, ஈரோடு மாவட்ட எஸ்.பி சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பங்களா புதூர் காவல் நிலைய போலீசார், வேட்டுவன்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டில், சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

arrest

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பணம் வைத்து சூதாடிய 4 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஏளூர் வேட்டுவன்புதூரை சேர்ந்த குமாரசாமி(62), கொடிவேரி நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்(38), ரஞ்சித்குமார்(28) மற்றும் முருகேசன்(37) என்பது தெரியவந்தது.  இவர்களில் குமாரசாமி வீட்டின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து,  4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், ரூ.30,150 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.