ஓசூரில் டெம்போ டிராவலர் வேனில் கடத்திய 350 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
gutka

பெங்களுருவில் இருந்து ஓசூர் வழியாக டெம்போ டிராவலர் வேனில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்பிலான 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய போலீசார் கடந்த வியாழக்கிழமை மாலை ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டெம்போ டிராவலர் வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, டெம்போ டிராவலர் வேனில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள்  கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, ரூ.3.03 லட்சம் மதிப்பிலான 350 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ டிராவலர் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். 

gutka

இது தொடர்பாக, வேனில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சேத்தன் (26), யோகேஷ் (22) என்பதும், அவர்கள் பெங்களுருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு குட்காவை கடத்திச்சென்றதும் தெரிய வந்தது. ஓசூர் சிப்காட் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், குட்கா கடத்தலில் வேறு யாருக்கும்  தொடர்பு உள்ளதா? என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.