கிருஷ்ணகிரி அருகே குடோனில் பதுக்கிய 340 கிலோ குட்கா பறிமுதல் - ஓருவர் கைது!

 
gutka

கிருஷ்ணகிரி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்க இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே போகனப்பள்ளி பகுதியில்  தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மகாராஜகடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் போகனப்பள்ளி - பூசாரிப்பட்டி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

arrest

அதில் அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த ஜிகேந்திர படேல்(24) என்பதும், அவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போகனப்பள்ளி பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மகாராஜகடை போலீசார் ஜிகேந்திர படேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.