செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, எல்இடி டிவிக்களை திருடிய 3 பேர் கைது!

 
gingee

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை மற்றும் 2 எல்.இ.டி டிவி-க்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள நரசிங்கனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகள், 2 எல்.இ.டி டிவிக்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

arrested

போலீசாரின் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கடலுர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவை சேர்ந்த அருள்ராஜ், ராமு மற்றும் நல்லசிவம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகை மற்றும் 2 எல்இடி டிவிக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.