கோவையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது... 8.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

கோவை பேரூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா, போதை பொருட்கள், குட்கா புகையிலை பொருட்கள் உள்ளிட்டை கடத்தி விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக, மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், நேற்று கோவை பேரூர் சிறுவாணி சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை, சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். 

arrest

அப்போது, அவர்கள் வைத்திருந்த மூட்டையில் விற்பனைக்காக  கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் 3 பண்டல்களில் இருந்த 8.5 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கடத்தியது தொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நுதன் மிதல்சிவா(33), சுதர்ஸ்லிமா(58) மற்றும் சென்னனுர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38) ஆகியே 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.