ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 3 பேர் கைது... 560 மதுபாட்டில்கள் பறிமுதல்!

 
rameshwaram

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 560 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக, ராமேஸ்வரம் உட்கோட்ட டிஎஸ்பி தனஞ்செயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்  டிஎஸ்பி தனஞ்செயன் மற்றும் ராமேஸ்வரம் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

arrest

அப்போது அவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார், துளிபாபா மாடத்தெருவை சேர்ந்த நம்புராஜன் மற்றும் திட்டக்குடி தெருவை சேர்ந்த கதிரவன் என்பதும், அவர்கள் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து  180 மி.லி அளவுடைய 560 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.