கழுகுமலையில் ஆட்டோவில் குட்கா கடத்திய 3 பேர் கைது: குட்கா புகையிலை, ஆட்டோ, 2 பைக்குகள் பறிமுதல்!

 
குட்கா

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஆட்டோவில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 8,064 மதிப்புள்ள குட்கா, ரூ.32 ஆயிரம் பணம், ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை - அத்திப்பட்டி சாலையில் நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, ஆட்டோவில் கொண்டுசென்ற சாக்கு மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இவற்றை கடத்தியது தொடர்பாக திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன்(27), கழுகுமலை ஆறுமுகநகரை பகுதியை சேர்ந்த சில்வியன்(47) மற்றும் கழுகுமலை அண்ணா புதுத்தெருவை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(28) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

12

அப்போது, அவர்கள் குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, கழுகுமலை போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து  ரூ. 8,064 மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள், ரூ.32 ஆயிரம் ரொக்கப்பணம்,  ஆட்டோ மற்றும்  2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.