காளையார்கோவில் அருகே பைக் விபத்தில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது!

 
accident

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.  

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டிச்சி ஊருணி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் செல்லதுரை (48), சங்கர்(45). சகோதரர்கள் இருவரும், நேற்று அதே பகுதியை சேர்ந்த உறவினரான அஜித் (25) என்பவருடன் காளையார்கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஆண்டிச்சி ஊருணிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று மாலை ஆண்டிச்சி ஊருணி அடுத்த சூசையப்பர் பட்டினம் விலக்கு பகுதியில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

sivagangai

இதில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்ட 3 பேரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.