கடலூர் அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு!

 
cuddalore

கடலூர் துறைமுகம் அருகே படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்களை கடலோர காவல் குழும போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கடலூர் மாவட்டம் செந்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் புண்ணியக்கோடி. இவர் நேற்று அதிகாலை கடலூர் துறைமுகத்தில் இருந்து தனக்கு சொந்தமான படகில் மகன் குணால் மற்றும் முதுநகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.


கடலூர் துறைமுகத்தில் இருந்து சுமார் 3.4 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்தபோது படகில் திடீரென இயந்திரம் பழுதானது. இதனால் அதிர்ச்சியடைந்த புண்ணியகோடி இதுகுறித்து செல்போன் மூலம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் அளித்தார். 

அதன் பேரில், கடலோர காவல் குழும ஆய்வாளர் சங்கீதா தலைமையிலான போலீசார், மீட்பு படகு மூலம் அங்கு சென்று சித்திரைப்பேட்டை பகுதியில் நடுக்கடலில் தத்தளித்த புண்ணியகோடி, குணால் மற்றும் மாரியப்பா ஆகியோரையும், அவர்களது படகையும் மீட்டு கடலூர் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.