கோவையில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய 3 பேர் கைது; 2 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
thudiyalur

கோவை துடியலூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய ஐடி ஊழியர் உள்ளிட்ட 3 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்களை, சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

cbe thudiyalur

அதில் அவர்கள், தேனியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ஜசாந்த் (23), கோவையை சேர்ந்த கவின் ராஜ் (21) மற்றும் முகேஷ் கண்ணன் (22) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2.100 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.