எட்டயபுரத்தில் காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது; ரூ.1.15 லட்சம் குட்கா பறிமுதல்!

 
gutka

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் காரில் கடத்திய ரூ.1.15 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீசார், இளம்புவனம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.  

tuti

இதனை அடுத்து, 17 மூட்டைகளில் இருந்த ரூ.1.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, குட்காவை கடத்திய மேல செய்தல் பகுதியை சேர்ந்த செல்வம்(38), மீனாட்சிபுரத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் மற்றும் நம்பிபுரத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் மீது எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.