நாமக்கல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டன!

 
namakkal

நாமக்கலில் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 293 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, குடிநீர் - சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 293 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

namakkal

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், அவற்றை துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இக்கூட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.