சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை... திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

 
dgl

திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கடந்த 2015ஆம் ஆண்டு ராமபட்டினம் புதூரை சேர்ந்த மாசித்துரை என்கிற மாசியப்பன் (32) என்ற இளைஞர், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சத்திரப்பட்டி போலீசார், திருப்பூரில் பதுங்கி இருந்த மாசியப்பன் மற்றும் சிறுமியை மீட்டனர்.

judgement

தெடர்ந்து, மாசியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மாசியப்பனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.