திருவாரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 265 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!

 
tvr

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 265 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 265 மனுக்கள் பெறப்பட்டது. 

tvr

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, தாட்கோ முலம் பயனாளி ஒருவர் சுய தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான ஆணையையும், 10 நபர்களுக்கு துய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.