திருப்பத்தூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 255 மனுக்கள் பெறப்பட்டன!

 
tirupatur

திருப்பத்தூரில் ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 255 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இன்றைய கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை , கூட்டுறவு கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடுகள் வேண்டுதல், மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள்  என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 255 மனுக்கள் பெறப்பட்டன.

tirupattur collector

பொதுமக்களிடம் குறைகளை விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்டு ஆட்சியர் அமர்குஷ்வாஹா, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரனை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பிளன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும்,முதல்வரின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி , தனித்துறை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஹரிஹரன், உதவி ஆணையர் (கலால்) பானு , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.