மின்வாரிய அதிகாரி வீட்டில் கத்திமுனையில் 25 பவுன் நகை, 1.80 லட்சம் கொள்ளை... 4 பேர் கும்பல் துணிகரம்!

 
robbery

ஈரோடு அருகே மின்வாரிய அதிகாரி வீட்டில் கத்தி முனையில் 25 பவுன் நகை மற்றம் ரூ.1.80 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வசிப்பவர் ஜெகநாதன். மின்வாரிய உதவி இயக்குனர். இவரது மனைவி யசோதா. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணி அளவில் ஜெகநாதன் வீட்டின் வெளியே சிலர் நின்றுள்ளனர். இதனால், அவர் அவர்களை யார்? என விசாரிக்க வெளியே சென்றுள்ளார். அப்போது, 4 மர்மநபர்கள் அவரது வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர்.

robbery

தொடர்ந்து, ஜெகநாதன், அவரது மனைவி யசோதா ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்களிடம் இருந்த பணம், நகைகை தரும்படி கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தம்பதியினர், யசோதா அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் அவர்களது மகள்களின் 10 பவுன் நகைகள் என மொத்தம் 25 பவுன் நகை, ரூ.1.80 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். இதனிடையே, கொள்ளையர்கள் சென்டிமென்ட் ஆக யசோதா கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கொடியில் இருந்த தாலியை கழற்றி அவரிடமே கொடுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து சித்தோடு போலிசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டின் அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.