தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மது விற்பனை செய்த 25 பேர் கைது!

 
arrest

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 25 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 648 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்ட எஸ்.பி. சாம்சன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்ட விரேதமாக மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த 15ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி .ஆகிய 2 நாட்களில்  சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

liquor

மேலும், அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 648 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சாம்சன் எரிச்சரிக்கை விடுத்துள்ளார்.