ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா ; 1,481 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கல்!

 
erode

நாட்டின் வருங்காலம் இளைஞர்கள் கையில் உள்ளதாகவும், எனவே அவர்கள் பொறுப்புணர்வுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் எனவும் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உலகி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் டாக்டர் உலகி கலந்துகொண்டு 1,481 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 97 பேர் பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெற்றவர்களும், 29 பேர் தங்க மெடல் விருது பெற்றவர்களும் ஆவர். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் உலகி, இன்று பட்டம் பெற்றுச்செல்லும் இளைஞர்கள் நாட்டின் வருங்கால தூண்கள் என்றும், அவர்கள் கையில் தான் நாட்டின் வளர்ச்சி உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே அவர்கள் பொறுப்புணர்வுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என கூறினார். 

dd

தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பள்ளி இறுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் கேலிக்கு உள்ளனதாகவும், ஆனால் அவர் மனம் தளராமல் தொடர்ந்து பட்டம் பெற்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார் என்றும், இன்று மிகச்சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக திகழ்வதாகவும் தெரிவித்தார். எனவே பள்ளி, கல்லூரி படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வருந்த வேண்டாம் என்றும், பட்டம் பெறுபவர்கள் ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எழுதி வெற்றிபெறலாம் என்றும் கூறினார்.மேலும், முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும், எனவே முயற்சியை கை விடக்கூடாது என்றும் கூறிய உலகி,  பட்டம் பெற்ற உங்கள் முன்  ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி, செயலாளர் பி.சி. பழனிசாமி, பாரம்பரிய அறங்காவலர்கள் லிங்கமூர்த்தி பரமேஸ்வரி, லிங்கமூர்த்தி தேவராஜா, கல்லூரி தாளாளர் பழனிச்சாமி, முதல்வர் டாக்டர் எம்.ராமன் உட்பட பல்வேறு துறை தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.