காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 232 மனுக்கள் பெறப்பட்டன!

 
kanchi

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 232 மனுக்கள் பெறப்பட்டன

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் சாலை வசதி, பேருந்து வசதி, இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 232 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய ஆட்சியர், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

kanchi

இதனை தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மமாவட்டம் பரந்துர் மண்டலம் வையாவூர் பகுதியை சேர்ந்த 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.