குமரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 207 மனுக்கள் பெறப்பட்டன!

 
kumari

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 207 மனுக்கள் பெறப்பட்டன. 

கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 207 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

kumari

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.