குற்றாலம் அருகே கோழிப்பண்ணையில் மோட்டார்களை திருடிய 2 இளைஞர்கள் கைது!

 
tenkasi

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கோழி பண்ணையில் மின் மோட்டர்களை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கால் நிலை எல்லைக்குட்பட்ட  பழைய குற்றாலம் அருகே ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு வைத்திருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மின்மோட்டார்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் குற்றலாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் தாமஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் கோமதிநாதன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

arrested

அதில், மேலகரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரது மகன் ரகுகுமார்(23) மற்றும் மாரியப்பன் என்பவரது மகன் முருகன் (25) ஆகியோர் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.