ஈரோட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்கள் கைது!

 
bike theft

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்களை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, அந்த இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை திருடியதை  ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(20), மற்றொருவர் சேலம் மாவட்டம் உடையாபட்டியை சேர்ந்த குமார்(19) என தெரிய வந்தது.

arrested

இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக் கொண்டனர்.  இதை அடுத்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.