கிருஷ்ணகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் கைது!

 
krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அருகே சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எட்டிப்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் விற்பனை செய்வதற்காக ஏராளமான கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

liquor

இதனை அடுத்து, கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை காய்ச்சி விற்பனை செய்தது தொடர்பாக எட்டிப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த மங்கை (40), செல்வி (45) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.