வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் 2 மலைப்பாம்புகள் பிடிபட்டது!

 
snake

வாணியம்பாடி அருகே தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையில் இருந்த 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் மற்றும் விஷப்பாம்பை பாம்புபிடி வீரர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி ஏரி மின்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோல் பதனியிடும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலை பின்புறம் இருந்து விநோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரே இடத்தில் 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் மற்றும்  விஷபாம்பு இருந்துள்ளன.

snake

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் சேர்ந்த பாம்பு பிடி வீரர் அப்சல் என்பவருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அப்சல், தொழிற்சாலையில் இருந்த 2 மலைப்பாம்புகள் உள்பட 3 பாம்புகளையும் பிடித்து, வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். தோல் தொழிற்சாலையில் 2 மலைப்பாம்புகள் உள்பட 3 பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.