காரிமங்கலம் அருகே வேன் மோதி பெண் உள்பட இருவர் பலி!

 
accident

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் மோதியதில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன அள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன் மனைவி அலமேலு(46). இவர் நேற்று காலை  அந்த பகுதுதியில் உள்ள அரசுப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அதேபோல், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(47) என்பவரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அலமேலு மற்றும் விஜயகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமார் பலத்த காயமடைந்தார்.

karimangalam

அவரை அருகில் உள்ள பொதுமக்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.